பீஜிங்: உறங்கிக் கொண்டிருந்த கணவனின் ஆணுறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவனின் மர்ம உறுப்பை அறுத்து வீசிய மனைவி! ஆனால் எடுத்து வந்து ஒட்ட வைத்த டாக்டர்கள்! பரபரப்பு சம்பவம்!

சீனாவைச் சேர்ந்த 31 வயதான நபருக்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது. அவரது பெயரை பாதுகாப்பு கருதி டாக்டர்கள் வெளியிடவில்லை. அவர் சம்பவத்தன்று உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது மனைவி செக்ஸ் செய்ய அழைத்துள்ளார். ஆனால், அந்த நபர் மறுத்துவிடவே, வேறு ஒருவருடன் கணவனுக்கு கள்ளக்காதல் இருக்குமோ என்ற சந்தேகம் மனைவிக்கு ஏற்பட்டிருக்கிறது. காமவெறி தலைக்கேறிய நிலையில் கணவனை பழிவாங்க நினைத்த மனைவி, தனக்கு உதவாத அவரது ஆணுறுப்பை வெட்டிவிட தீர்மானித்தார்.
இதன்படி, கத்தரிக்கோலை எடுத்து, கணவனின் ஆணுறுப்பை கஜக் கஜக் என கத்தரித்துவிட்டார். வலி தாங்காமல் அந்த நபர் வீறிட்டு கதற மனைவி தப்பியோடிவிட்டார். பிறகு, பாதி கத்தரிக்கப்பட்ட நிலையில் தோலுடன் தொங்கிய ஆணுறுப்பை கையில் பிடித்தபடி அந்த நபர் பெக்கிங் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், பழையபடி ஆணுறுப்பை ஒட்டிவிட்டனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அந்த நபரின் ஆணுறுப்பு இயங்க தொடங்கியுள்ளது. அவரால் இயல்பாக சிறுநீர் கழிக்க முடிவதாகவும், சற்று வலி இருந்தாலும் அவரது ஆணுறுப்பு எழுச்சி பெறுகிறது எனவும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் 2 மாதங்கள் கழித்து, பழையபடி முழு வேகத்துடன் அவரால் உடலுறவு செய்ய முடியும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.