தினகரனை பிரிந்த சசிரேகா! காரணம் என்ன தெரியுமா?

நாளிதழைத் திறந்தால், அ.ம.மு.க.வில் இருந்து தினம் ஒரு நிர்வாகியாவது பிரிந்துபோன செய்தியைப் பார்க்கமுடிகிறது. அந்த வகையில் தங்கதமிழ்செல்வன் வெளியேறிய அதிர்வு தீர்வதற்குள் அடுத்த இரண்டு பேர் கட்சியில் இருந்து ஜூட் விட்டிருக்கிறார்கள்.


தினகரனுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கருதப்பட்டவர் சசிரேகா. அடிப்படையில் வழக்கறிஞரான சசிரேகா, ஜெயா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். அது மட்டுமின்றி தினகரன் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்துவந்தார்.

இதுதவிர அ.ம.மு.க. சார்பில் ஊடகங்களில் கலந்துகொண்டு கலகலப்பாக பேசவும் செய்வார். அதனால், சசிரேகாவுக்கு கொஞ்சம் கட்சியில் செல்வாக்கு உண்டு. இந்த நிலையில் தங்க.தமிழ்செல்வன் விவகாரம் அ.ம.மு.க.வில் சூடு கிளப்பிவரும் நிலையில் சசிகலா கொஞ்ச நாளாகவே காணாமல் போயிருந்தார். அவர் கணவர் வழக்கறிஞர் எஸ்.ஆர். அன்பு வடசென்னை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

அன்பு, சசிரேகா ஆகிய இருவரும் கட்சி நடவடிக்கைகளில் ஒதுங்கியே இருந்தனர். தேர்தல் நேரத்தில் கடினமாக உழைத்தும், அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.இந்நிலையில் சசிரேகா மற்றும் வழக்கறிஞர் அன்பு ஆகியோர் இன்று தினகரன் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்பு அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டனர்.

சசிரேகா, அன்பு வெளியேறியது குறித்து அ.ம.மு.க.வில் விசாரித்தபோது, ‘‘தேர்தல் தோல்விக்குப் பிறகே இருவரும் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்கள் செல்வதால் கட்சிக்கு ஒரு இழப்பும் இல்லை’’ என்கிறார்கள். இன்னும் எத்தனை பேருப்பா கட்சியில இருக்கீங்க.