ஏர்போர்ட்டில் எடப்பாடியை வரவேற்காமல் எஸ்கேப் ஆன பன்னீர்! பின்னணி மர்மங்கள்!

ஒருவழியாக நமது முதல்வர் எடப்பாடியார் தன் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு வந்துவிட்டார்.


அவரை வரவேற்க முன்னாள் பார்லிமெண்ட் துனை சபாநாயகர் தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர்களுடன் டிஜிபி திரிபாதியும் வந்தார்கள்.வந்து இறங்கியது அதிகாலை 2.40 என்பதால் எடப்பாடியார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெளிவில்லை.

உதாரணத்திற்கு இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும்படி இங்கிலாந்து எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக சொன்னார்.இங்கிலாந்து எம்.பிக்களிடம் நம்ம ஊர் எம்.பிக்கள் அளவுக்கு வசதிவாய்ப்பு இல்லை என்பதை யாரும் முதல்வருக்குச் சொல்லவில்லையோ.

இந்த நள்ளிரவு சம்பவத்தில் எல்லோர் கண்களும் தேடியது துணை முதல்வர் ஒபிஎஸ் முகத்தைத்தான்,அவர் வராதது ஏன் என்று தங்களுக்குள் வி.ஐ.பிகள் விவாதித்தபடி கலைந்து சென்றனர்.விடிந்ததும்தான் விபரம் வெளியே வந்திருக்கிறது. நானும் தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருந்தவர்தான்,தான் போய் கூட்டத்தில் ஒரு ஆளாக நின்று வரவேற்பதா என்று ஒபிஎஸ் நினைத்து விட்டதாகத்தான் எல்லோரும் நினைத்திருக்கிறார்கள்.

ஆனால்,காரணம் அது இல்லையாம்.எடப்பாடியின் இந்த முதலீடு ஈர்ப்பு பயணம் முழுத்தோல்வி என்று ஒபிஎஸ் கருதுகிறாராம்.இங்கே ஆட்டோமொபைல் விற்பனை சரிந்து கார் தொழிற்சாலைகள் மூடிவிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கார் தொழிற்சாலை வருகிறது என்றதும்,ஒரு பத்தாயிரம் கோடி அளவுக்கூட முதலீடு திரட்டப்படாத இந்தப் பயணம் விரைவில் கேலிக்கிடமாகத்தான் போகிறது.

மீம் போட்டு ஊரே கலாய்க்கும்.என்று எதிர்பார்க்கிறாராம்.அதனால் தன் தலையும் அதில் உருட்டப்படக் கூடாது என்பதால்தான்,ஏர்போர்ட்டுக்கு போகாமல் நைசாக எடப்பாடியை வீட்டில் சென்று பார்த்திருக்கிறார் ஒபிஎஸ்.