ரஜினியை மோடி கைவிட்டது ஏன்?

எழுபதாவது பிறந்த நாளை எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார் ரஜினி.


அதாவது ரஜினி சார்பில் முதன்முதலாக லதா ரஜினிகாந்த் எல்லோருக்கும் இனிப்பு வழங்கியிருக்கிறார். வழக்கமாக ரஜினி வீட்டு வாசலில் காத்திருக்கும் நிருபர்களுக்கும் ரசிகர்களுக்கும் குடிக்க தண்ணீர்கூட தரமாட்டார்கள். இந்த ஆண்டு புதுமையாக இனிப்பு வழங்கியது அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.

இந்த நிலையில், அதிகாலை முதல் எதிர்பார்த்த வாழ்த்து அழைப்பு மட்டும் வரவே இல்லை என்பதுதான் ரஜினியின் பெருங்கவலையாக மாறியிருக்கிறது. ஆம், கடந்த மூன்று ஆண்டுகளாக ரஜினிகாந்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பவர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி. அவர் இந்த ஆண்டு வாழ்த்து சொல்லவில்லை என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

அவர் மட்டுமல்ல மோடியின் தமிழகப் பிள்ளைகளான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களும் வாழ்த்து சொல்லவில்லை. ரஜினிக்கு நாட்டின் உயர் விருது கொடுத்த பிறகும், அவர் இன்னமும் அமைதியாக இருப்பதை கண்டு பா.ஜ.க. கடுப்பாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இப்படி ஒரு பிரச்னை என்றால் ரஜினிகாந்த் என்ன செய்வார் என்று அவரது நெருங்கிய தோழர் ஒருவர் சொல்லும் தகவல் என்ன தெரியுமா? எந்த நேரமும் பா.ஜ.க.வின் திட்டம் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவாக ரஜினி பேசுவார் என்கிறார்கள்.

அதையும்தான் பார்த்துவிடலாம்.