மோடி எப்போதும் ஏன் பாகிஸ்தானைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்? வைரலாகும் கிண்டல்கள்!

நாட்டில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும், அதற்கு காரணம் என்று பாகிஸ்தான் மீது கையைக் காட்டுவது மோடியின் வழக்கம்.


நாட்டில் நடந்த அத்தனை குழப்பத்துக்கும் ஜவஹர்லால் நேருதான் காரணம் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி குற்றம் சாட்டி வந்தார். இப்போது மீண்டும் மோடியை குற்றம் சாட்ட முடியாது என்பதால் பாகிஸ்தான் மீது பாய்ந்து வருகிறார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் பாகிஸ்தானை விமர்சிப்பதில்லை? என்று ஒரு அர்த்தமுள்ள (?) கேள்வியைக் கேட்டுள்ளார் மோடி. இவருக்கு மம்தா அழுத்தமான ஒரு பதிலடி கொடுத்தார். அதாவது மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தான் பிரதமரா என்று கேள்வி கேட்டிருந்தார்.

இப்போது மோடியின் கேள்விக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் பதில் அளித்துள்ளன. அதன்படி, இந்தியாவின் நீள, அகல, உயரமென்ன - பாகிஸ்தானின் பரப்பென்ன? இரண்டையும் ஒப்பிடுவது இந்தியாவின் நிறைக்கு மிகவும் இழுக்கு.

ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் இந்தப் பாகிஸ்தானை ஏசித்தான் மகாராஷ்ட்ரம், ஹரியானா, ஜார்க்கண்ட் எனத் தோல்விகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார். அவர் அந்த இடத்திலேயே நின்று குமையட்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு நாட்டைக் குறித்த மெய்யான கவலைகள் இப்போது தோன்றிவிட்டன. வகுப்பு ஒற்றுமையையும் வளர்ச்சியையும் குறித்து இனியும் சிந்திக்காமல் இருக்க முடியாது என்கிற உணர்வை அவை எட்டிவிட்டன. இதனைச் சீர்குலைக்கும் நோக்கில்தான், பாகிஸ்தானை இந்தக் கட்சிகளும் குதற வேண்டுமென்று விரும்புகிறார்.

மோடியின் இத்தகைய குறுகிய மனம் உலக அரங்கில் இந்தியாவுக்குக் கௌரவத்தைக் கொண்டுவந்து சேர்க்காது. இந்தியாவின் கோரிக்கைக்குக் கொஞ்சம் செவிமடுத்துப் பாகிஸ்தானை ஒதுக்கிவைத்த அமெரிக்கா, மீண்டும் பாகிஸ்தானுடன் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தத் தீர்மானித்துள்ளது. அந்நாட்டின் வீரர்களுக்குப் பயிற்சிகளைக் கொடுக்கவும் திட்டம் ரெடி. மோடி இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்கத் தெரியாமல் நாள்தோறும் கதறுகிறார். பாகிஸ்தானை இதர நாடுகள் கண்டிக்கலாம்; ஆனால் கைவிடாது. அத்துடன் இதனால் மாத்திரம் மோடியம் எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டவும் முடியாது.

நாட்டு மக்களை வாட்டிவதைக்கும் பொருளாதார நிலைகுறித்து மோடிய மூடர்கூடம் ஆய்வுசெய்ய வேண்டும். அதை விட்டுவிட்டுப் பாகிஸ்தானை ஏசித் தொலைத்தால் அந்த ஆமை இந்திய முயலைத் தாண்டிப் பறந்துவிடும்