புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி நியமனத்தில் கால தாமதம்! அதிர வைக்கும் காரணம்!

கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு முன்னரே டி.ஜி.பியாக திரிபாதியும், தலைமைச் செயலாளராக சண்முகமும் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்ற செய்தி உறுதியாகிவிட்டது.


ஆனால், ஏன் கடைசி நொடி வரை அறிவிப்பை காலதாமதம் செய்தார்கள் என்பதற்கு ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் உலா வருகிறது. அதாவது ஜாஃபர் சேட் வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடியார் விரும்புவதாகவும், அதேபோன்று கவர்னரின் செயலாளராக இருக்கும் ராஜகோபால் தலைமைச் செயலராக வரவேண்டும் என்று தமிழக அரசு முயற்சி எடுப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டே இருந்தது. இது எந்த வகையிலும் உண்மை இல்லையாம்.

ஆனால், போட்டியில் இருந்த ஜாஃபர் சேட் மற்றும் ராஜகோபால் மனம் வருந்தக்கூடாது என்பதற்காக, கடைசிவரை அவர்களுக்காக ஒரு போராட்டம் நடந்தது போன் சீன் கிரியேட் செய்வதற்குத்தான் காலதாமதம் செய்யப்பட்டதாம். இதை அவர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ நாங்க நம்பிட்டோம் என்று கோட்டை வட்டாரங்கள் சிரிக்கிறது.

இப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜே.கே. திரிபாதி இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தனது 30 வருட காவல் பணியில்‌ தென்மண்டல ஐ.ஜி, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி. என பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார், திரிபாதி.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணிய‌ற்றிய திரிபாதி, 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்‌. ‌பிரபல ரவுடி வீரமணி‌, வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டது இவரின் பதவி காலத்தில்தான். அதனால் இனிமேல் என்கவுன்டர்கள் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.