சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கொதிப்பது ஏன்..? உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆப்பு?

கொரோனா வைரஸ் எப்படி பாதிக்கும் என்பது குறித்து சீனாதான் உலகம் முழுவதும் பாடம் நடத்தியது. அதாவது மாஸ்க், சானிடைசர் பயன்படுத்தி தனிமைப்படுத்திக் கொண்டால், இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம் என்று சொன்னது.


அதைக் கேட்டுத்தான் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் மாஸ்க், சானிடைசருக்கு சண்டை போட்டன. ஆனால், அங்கே இறப்பு விகிதம் எக்குத்தப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இப்போதுதான், அவற்றால் மட்டும் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது.

சீனா சொன்னதையே உலக சுகாதார நிறுவனமும் சொன்னது. இதுதான் அமெரிக்காவுக்குக் கோபம். அதனால்தான், ``உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் பெருமளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதை நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். உலக சுகாதார அமைப்பு கொரோனா பற்றிய தகவல்களை முன்னரே அறிந்திருக்கும். அப்படி அறிந்தும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை. 

வைரஸை எதிர்கொள்வதில் உலக சுகாதார அமைப்பு சரியாக நடந்துகொள்ளவில்லை. அது சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. சில காரணங்களால் நாங்கள்தான் உலக சுகாதார அமைப்புக்கு அதிகளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதன் பெரும் பகுதியை நிறுத்த ஆலோசித்து வருகிறோம்.

இது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை, எங்களின் ஆலோசனை. சீனாவில் முதல் வைரஸ் தொற்று உறுதியானதும் சீனாவுக்கான எங்கள் நாட்டு எல்லைகளை மூட நாங்கள் உலக சுகாதார அமைப்பினரிடம் ஆலோசனை கேட்டோம். ஆனால், அவர்கள் எல்லைகளை மூடத் தேவையில்லை எனத் தவறான ஆலோசனை மட்டுமே வழங்கினர்.

நல்லவேளை அவர்களின் கருத்தை நான் நிராகரித்துவிட்டேன். அவர்கள் ஏன் எங்களுக்கு இதுபோன்ற தவறான பரிந்துரையை வழங்கினார்கள்?” எனக் கடுமையாக கொந்தளித்தார்.

உலகை எல்லாம் ஏமாற்றிவந்த அமெரிக்காவை சீனா இப்போது ஏமாற்றியுள்ளது. அம்புட்டுத்தான் சமாச்சாரம்.