தமிழக முதல்வரை எல்.முருகன் சந்தித்தது எதற்கு தெரியுமா..? காரணம் இதோ…

யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க.வின் முதல் பிரசாரக்கூட்டத்தில், ‘எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி’ என்று அதிரடியாக அறிவிப்பு வெளியானது.


அப்படியொரு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாராத கூட்டணிக் கட்சிகள் கலங்கி நிற்கின்றன. அதாவது, கூட்டணிக் கட்சிகள் இணங்கிப் போகவில்லை என்றால், தனியே போகவும் தயாராக இருக்கிறது அ.தி.மு.க. என்பதுதான் வெளியே சொல்லப்படாத விஷயம்.

இந்த நிலையில்தான், இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடியாரை சந்திக்க ஓடோடிவந்தார் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன். அப்போது, புதிய கல்விக்கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பெறப்பட்ட கையெழுத்துக்களை கொடுக்க வந்தேன் என்று எல்.முருகன் கூறியிருக்கிறார்.

அவர் அரசியல் பேசவில்லை என்றாலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இருவரும் பேசியிருக்கிறார்கள். அதனால், இருவரும் அரசியல் பேசினார்கள் என்பதுதான் உண்மை. அ.தி.மு.க. கூட்டணியில்தான் பா.ஜ.க. இருக்கிறது, எதற்காகவும் அவசரப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதுல என்ன ரகசியமோ…?