கிட்டத்தட்ட மூன்று நாட்களாக லாட்டரி கிங் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
மார்ட்டின் கேஷியரை கொலை செய்தது யார்? ரெய்டு விவகாரத்தில் திடுக் திருப்பம்!
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் எக்கச்சக்கமாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 600 கோடி ரூபாய்க்கு முதலீடுகள், 8 கோடி ரூபாய்க்கு பணம் ரகசிய இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு, அவரது அலுவலகத்தில் வேலை செய்த ஒருவரே, பணம் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார் மார்ட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த கேஷியர் பழனிசாமி. இந்த மரணம் நிச்சயமாக தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற நிலையில், அவரது மகன் ரோகின் குமார் இன்று கோவை காவல்துறை ஆய்வாளருக்கு ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.
மார்ட்டின் நிறுவனங்களில் ஒன்றான ஃப்யூச்சர் கேமிங் அன்ட் ஹோடெல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் கடந்த 25 வருடமாக வேலை செய்துவந்தவர் பழனிசாமி. இவரை 30ம் தேதி வருமான வரித்துறையினர் வந்து அழைத்துச்சென்றனர். வருமான வரித்துறையினர் விசாரணையின்போது, எனது தந்தையை துன்புறுத்தினார்கள்.
அதன்பிறகு அவர் வெளியே வந்தார். அதன்பிறகு எனது தந்தையை தலையிலும் முகத்திலும் தாக்கி கொலை செய்துள்ளனர், இந்த விவகாரத்தில் மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கிளப்பியிருக்கிறார்.
இந்த விவகாரம் மார்ட்டின் கைது வரைக்கும் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது தி.மு.க.வினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், தி.மு.க.வினருக்குக் கொடுத்த பணத்திற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.