மத்திய அமைச்சர் பதவி யாருக்கு? எடப்பாடியுடன் பியூஸ் கோயல் முக்கிய பேச்சு!

அதிமுகவில் மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


நாளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பெற்றுள்ள அதிமுக விற்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவிதான் என்று பாஜக காட்டி வருகிறது.

ஆனால் மாநிலங்களவையில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கைக் தொட்டுக்காட்டி அதிமுக இரண்டு மத்திய அமைச்சர் பதவியை கேட்கிறது. அதேபோல் ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது என்பதிலும் திமுகவில் குழப்பம் நீடிக்கிறது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆக்குவதில் உறுதியாக உள்ளார்.

ஆனால் தற்போது எம்பிக்கள் ஆக உள்ளவர்களில் மிகவும் சீனியரான ஒரத்தநாடு வைத்தியலிங்கத்தை மத்திய அமைச்சராக எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதனால் அதிமுகவில் மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்று முடிவெடுக்க முடியாமல் பாஜகவும் குழப்பத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது வைத்திய லிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடம் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து பியூஸ் கோயல் சில தகவல்களை கூறியதாகவும் அதனை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் அதிமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுபவர் யார் என்று தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.