சீமான் கைது எப்போது? தயாராக காத்திருக்கும் காவல் துறை. கப்சிப் எடப்பாடி!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், அவர் எங்கே இருக்கிறார் என்பதை மிகவும் சீரியஸாக கண்காணித்துவருகிறது தமிழக காவல் துறை.


ஆனால், இன்னமும் கைது செய்வதற்கான சிக்னல் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில் சீமானை சிறையில் போட்டே தீரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்துவருகிறது.

‘ராஜீவ்காந்தியை நாங்கள்தான் எங்கள் மண்ணில் கொன்று புதைத்தோம்... என்பதில் எனக்கு பெருமையே’ என்று சீமான் பேசியதுடன் நில்லாமல், அதை வாபஸ் வாங்கவேண்டிய அவசியமும் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்து இருக்கிறார்.

ஒரு முன்னாள் பிரதமரை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த சீமானை இன்னமும் வெளியே விட்டு வைத்திருப்பது சட்டத்திற்கு ஏற்பட்ட சோதனை என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

அதே நேரம், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும், நாங்குநேரியில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் சீமான் இப்படி பேசியிருக்கிறார். அவருக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால்தான், இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார் என்றும் பேச்சு உலவுகிறது.

அ.தி.மு.க.வின் கூட்டாளிதானோ என்று நம்பும் வகையில்தான் அரசு மற்றும் சீமானின் செயல்களும் இருக்கின்றன. 

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி..?