வாட்ஸ்ஆப் வீடியோ கால்..! அவன் காட்டக் கூடாததை காட்டிவிட்டான்..! கதறும் இளம் பெண்!

பெங்களூரு: வெளிநாட்டுப் பெண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் தொல்லை தந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண், பெங்களூருவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு தினசரி வாட்ஸ்ஆப்பில் கீழ்த்தரமான மெசேஜ்கள் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால், கடந்த அக்டோபர் 19ம் தேதி குறிப்பிட்ட ஆபாச மெசேஜ்களை அனுப்பும் நபர் வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் ஒன்றையும் செய்துள்ளார். இதனை அப்பெண் ஏற்கவில்லை என்றாலும், யாரோ தன்னுடன் பணிபுரியும் ஒருவர்தான் இப்படி சில்மிஷம் செய்கிறார் என்று கண்டுபிடித்துள்ளார்.  

இதன்பேரில், தற்போது பெங்களூரு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து, அந்த சில்மிஷ நபரை தேடி வருகின்றனர்.