அபாண்டமான பொய்! கவினை ஏமாற்றிய லாஸ்லியா! வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களம் இறங்கும் போதே கணிசமான ரசிகர் பட்டாளத்துடன் நுழைந்தவர் தான், இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


ஆரம்ப காலத்தில் எதிலும் தலையிடாமல் அமைதியாக இருக்குற இடம் தெரியாமல் இருந்த லாஸ்லியா, சமீப காலத்தில் வனிதா, சேரன் உட்பட பகிரங்கமாக எதிர்த்து வருகிறார்.

பிக் பாஸ்வீட்டில் யாருடன் அதிக நேரம் செலவிடுகிறார் என்றால் எல்லாருக்கும் தெரிந்தது தான், இரவு பகல் பாராமல், கவினுடனான் உறவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதல் கடந்த வாரத்தில் கவின் உன் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவாய் என கேட்க, அவ்வளவு தான் இந்தம்மா , எனக்கு கேக்கே வெட்டினது இல்ல, எனக்கு ஆசையா இருக்கும் ஆனால் சொல்ல மாட்டேன்.

என் தங்கச்சிக்கு வெட்டுவாங்க ஆனா எனக்கு வெட்டியதில்லை என பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள, அவருக்கு 21 வயது ஆன போது அவர்து குடும்பத்துடன் கொண்டாடிய பிறந்த நாள் புகைப்படத்தை தேடி பிடித்து வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

அதிலும் அவர் சேரன் விசயத்தில் கூட அவரை நாமினேட் செய்ததாக அழுது புலம்புவதும், அவர் செய்த தவறுக்கு கேள்விக்கேட்டால், சிரித்து மழுப்புவதும் அவர் மீதான ரசிகர்கள் நம்பிக்கையை குறைத்துள்ளது.