உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன தெரியுமா?

உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் நிச்சயமாக செய்யக் கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன.


அந்தரங்கம் என்பது தமிழ் கலாச்சாரத்தில் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. புனிதமாகக் கருதப்படும் பட்சத்திலும் அது குறித்த பல்வேறு சந்தேகங்கள் ஆண்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உடலுறவு சமாச்சாரங்களை நம் முன்னோர்கள் இலைமறை காயாகவே தலைமுறைகளைக் கடந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

சிலர் இந்த விஷயத்தில் புலியாக இருந்தாலும் பலரும் இந்த விஷயத்தில் தடுமாறுவது உறுதி. உடலுறவுக்கு முன் செய்ய வேண்டியது என பல விஷயங்கள் இருந்தாலும் உடலுறவுக்கு பின் ஆண்கள் செய்யவே கூடாது என்ற சில விஷயங்கள் இருக்கின்றன. உடலுறவை முடித்த அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழந்து செல்வது ஆண்களின் வழக்கம். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது. எனவே உடலுறவு முடிந்தபிறகு படுக்கையிலிருந்து எழுந்து செல்வதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

உடலுறவுக்கு பிறகு நேராக குளியலறை சென்று குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். உடலுறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் மனம் விட்டு பேசி விட்டு அல்லது சிறு முன் விளையாட்டுக்களை விளையாடி விட்டு படுக்கையில் இருந்து எழுவது நல்லது. இதேபோல் உடலுறவை முடித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறும்போது குளிக்காமல் புறப்படக் கூடாது. எந்தவித தயக்கமும் இல்லாமல் உடலுறவை முடிக்க வேண்டும். மனைவிக்கோ அல்லது துணைக்கோ திருப்தி இல்லையோ உச்ச கட்டம் ஏற்பட வில்லை என்கிறார் ஒருபோதும் மனதில் எழவே கூடாது.

இதைப்போல் உடலுறவை முடித்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. பால் அளவாக குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை கொடுக்க கூடாது.