செங்கோட்டையனுக்கு என்னாச்சு..? அவருக்கு ஒரு பரீட்சை வையுங்கப்பா

கல்வித் துறையில் செங்கோட்டையன் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பகட்டத்தில் பெரும் பரபரப்பாக இருந்தன.


பாடத்திட்டங்களில் ஆக்கபூர்வமான சிந்தனை தெரிந்தது. ஆனால், இப்போது மத்திய அரசுக்கு போடும் ஜால்ரா சத்தம் மட்டுமே பலமாகக் கேட்கிறது. ஆம், புதிய கல்வித் திட்டத்தை இந்தியாவில் எந்த ஒரு மாகாணமும் ஆதரிக்கும் முன்னரே கல்வித் திட்டத்தில் தொடங்கிவைத்தார் செங்கோட்டையன். இதையடுத்து 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு என்று அறிவித்தார்.

கடும் எதிர்ப்பு வந்ததும் இல்லை என்று அறிவித்தவர், பின்னர் மீண்டும் இருக்கிறது என்றார். அதன்பிறகு, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையம் வேறு ஒரு இடமாக அமையும் என்று தெரீவித்தார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பவே, மீண்டும் பள்ளியிலே எழுதிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்துள்ளார்.

இப்படி நாளொரு அறிக்கை விட்டு குழப்பிக் கொண்ட செங்கோட்டையனுக்கு ஒரு பரீட்சை வைக்க வேண்டும். அதனை அவர் எழுதி பாஸ் செய்ய வேண்டும் என்பதுதான் மாணவர்களின் ஆசையாம்.

அதே போன்று ஜல்லிக்கட்டுவை பாடத்திட்டமாக வைக்கவேண்டும் என்று கேட்கப்போதும், அது மாணவர்களின் கல்விச் சுமை என்று தெரிவிக்கிறார். இப்படி ஒரு குழப்பவாதி கல்வி அமைச்சராக இருந்தால் மாணவர்களின் நிலைமை என்னவாகும்?