முதலிரவு இனிமையானதாக அமைய பெண்கள் இதை மட்டும் செஞ்சா போதும்!

முதலிரவு! ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கான தொடக்கம். அப்படிப்பட்ட முதலிரவு மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும், வாழ்நாளில் எப்போது நினைத்தாலும் குதூகலம் பொங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.


முதலிரவும் மறக்க முடியாத இனிய இரவாக மாற சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  அது என்ன என்று தற்போது பார்க்கலாம். 
 
பரஸ்பரம் பேசி கொள்வது! ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காதல் திருமணமாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டு ,கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். அது ஒரு அன்பார்ந்த பந்தத்தை ஏற்படுத்தும்.  

தேடலிலும் இன்பம் வரும்!  முதலிரவு அறையில் , சாக்லேட்கள், சிடிக்கள், கிளுகிளுப்பான பொருட்களை மறைத்து வைத்து விட்டு, அவற்றை உங்கள் துணையை தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். தேட வேண்டிய பொருட்களில், நீங்களும் ஒன்றாகி விட்டால் களிபின் உச்சம்தான்.

மெதுவா... மெதுவா... ! முதலிரவை அவசரமாக ஆரம்பிக்கக் கூடாது. மெதுவாக, ரொமாண்டிக்காக கட்டியணைத்துக் கொள்ளுதல், அழுத்தமான முத்தம், ஒருவருக்கு ஒருவர் சாக்லெட் அல்லது இனிப்பு ஊட்டுதல்... வாழ் நாள் முழுவதும் எவ்வளவு அன்பாக இருக்கப் போகிறீர்கள் என்பதை முதன் முதலாக உணர்த்தும் நேரம் அல்லவா?

குளியல் டப்! இரண்டு பேரும் சேர்ந்து ஒரே பாத் டப்பில் குளிக்கலாம். நீரில் ரோஜா இதழ்களை தூவலாம். மசாஜ் பண்ணி விட ஆயில், எல்லம் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் என்றால் மூடுக்கு சொல்லவா வேண்டும்.

அறையின் சூழல்! அறையில் பெர்ஃயும் வாசனை நிரம்பி இருக்கவேண்டும் ஒலி குறைவாக ஒரு ரொமாண்டிக் பாட்டு... கவர்ச்சி உடை... சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டே... முதலிரவு எப்போது நினைத்தாலும் கிறக்கத்தைத் தரவேண்டும்.