இன்று காலை கன்னியாகுமரி பகுதியில் திடீரென ஒரு வாட்ஸ் ஆப் செய்தி வைரலாகப் பரவியது.
வசந்த் அன்ட் கோவில் விவசாய கடன் தள்ளுபடி! முற்றுகையிட்ட மக்கள்! பதறிய அண்ணாச்சி!

அந்த செய்தியில், ‘வங்கிகளில் மக்கள் விவசாய அடிப்படையில் வைத்திருக்கும் கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக இருப்பதால், அனைவரும் தங்கள் அருகிலுள்ள வசந்த் அன் கோ நிறுவனத்தில் வருகிற 30.5.19க்குள் வங்கிக்கணக்குப் புத்தகம், ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்துச்சென்று நேரில் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஹெச்.வசந்தகுமார் எம்.பி. என்று தகவல் பரவியது.
அவ்வளவுதான், மக்கள் இன்றே வசந்த் அன் கோ நிறுவனத்தை முற்றுகையிடத் தொடங்க அலறியே விட்டாராம் அண்ணாச்சி வசந்தகுமார். உடனே, இப்போது வலைத்தளங்களில் பரவிவரும் செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தோல்வியின் விரக்தியில் பிஜே.பியினர் செய்த்தும் பித்தலாட்டம். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அலறியிருக்கிறார்.
இன்னும் எப்படியெல்லாம் கிளப்பிவிடப் போறாங்களோ?