ஒரே ஒரு மாத்திரை! ஒரு மாதம் முழுவதும் எழுச்சி! ஆனால் அதன் பிறகு ஆண்மையை இழந்தேன்! இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

லண்டன்: ஒரு மாதமாக தொடர்ந்து வயாகரா பயன்படுத்திய நபர், மலடான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்தவர் நாட் திண்ட் (26 வயது). இவர், கடந்த ஜூன் மாதம் முழுக்க, தொடர்ச்சியாக, வயாகரா பயன்படுத்தியுள்ளார். இதன்காரணமாக, அவருக்கு திடீரென ஆண் உறுப்பு எழுச்சி பெற்ற நிலையில் அப்படியே நின்றுவிட்டது. செக்ஸ் முடிந்த பிறகும் விறைப்புத்தன்மை அடங்காமல் செங்குத்தாக நிற்கவே அதிர்ச்சி அடைந்த நாட் திண்ட், டாக்டரிடம் சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அடிக்கடி வயாகரா பயன்படுத்தி ஆண் உறுப்பை எழுச்சி பெறச் செய்ததால் பக்க விளைவு ஏற்பட்டு, விறைப்புத்தன்மை அப்படியே நிலைத்துவிட்டது. இதற்கு Priapism எனப் பெயர். ஆண் உறுப்பு இயல்பு நிலைக்குச் செல்லாமல் செங்குத்தாக நிற்பதோடு, கடுமையான வலியும் தரக்கூடிய பாதிப்பாகும்.

இதனை சரிசெய்ய, கடந்த 3 நாட்களாக டாக்டர்கள் போராடியும் திண்ட் ஆண் உறுப்பு திண்டு போல நிற்பதால், பிளேடு பயன்படுத்தி, ஆண் உறுப்பிற்குச் செல்லும் ரத்தக் குழாயை சிறிதளவு துண்டித்து, ரத்த ஓட்டத்தை குறைக்க, டாக்டர்கள் முடிவு செய்தனர்.

வேறு வழியின்றி திண்ட் அதற்கு சம்மதிக்கவே, உடனடியாக, பிளேடினால் ஆண் உறுப்பிற்கு செல்லும் ரத்தக் குழாயை சிறிதளவு காயப்படுத்தி, ரத்தத்தை வெளியேற்றி, அதன் விறைப்புத் தன்மையை மருத்துவர்கள் குறைத்தனர். ஒருவழியாக, திண்ட் ஆண் உறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது.  

எனினும், அவரால் இனி காலத்திற்கு எழுச்சி பெற முடியாது. திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. அத்துடன், மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அடிக்கடி வயாகரா உள்ளிட்ட ஊக்க மருந்துகளை செக்ஸ்க்கு பயன்படுத்தினால் இப்படி ஏதேனும் பின் விளைவு ஏற்பட்டுவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.