கூட்டத்தை காட்டி சசிகலாவிடம் வாங்கிய பணம் எங்கே? கணக்கு கேட்ட விவேக்! அதிர்ச்சியில் டிடிவி!

நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 30 இடம் பிடிப்போம், சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளை பிடிப்போம் என்று சசிகலாவிடம் உறுதி கொடுத்தாராம் தினகரன். அதனாலே அ.தி.மு.க.வுடன் இணையவேண்டும் என்ற முடிவை தள்ளிப்போட்டார் சசிகலா.


மேலும், அ.ம.மு.க.வுக்கு செல்லும் இடத்தில் எல்லாம் கூடும் கூட்டத்தைக் காட்டி, அத்தனை வேட்பாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சசிகலா மூலம் பணமும் வாங்கிவிட்டார் தினகரன். இந்த விவகாரம் தெரிந்துதான் உடனே விவேக்கை லபக் என்று அமுக்கியது கர்நாடக காவல் துறை.

ரூபா கொடுத்த கம்ப்ளைன்ட் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பெங்களூருக்கு விவேக்கை அழைத்துச்சென்று கடந்த ஒரு வாரமாகவே விசாரித்து வருகிறார்கள். அதனால் சசிகலாவும் தமிழக தேர்தலைக் கண்டுகொள்ளாமல், விவேக் விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டினார்.

இந்த நிலையில், தினகரனால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் மொத்தமே 14 பேருக்குத்தான் பணம் கொடுக்கப்பட்டதாம். மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை தினகரன் ஸ்வாகா செய்துவிட்டாராம். இதுகுறித்து பலரும் சசிகலாவுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். 

இதனை தினகரனிடம் சசிகலா விசாரித்தபோது, ‘உங்க உறவினர் என்னை நம்பாம, கட்சிக்காரங்க சொல்றதை நம்புறீங்க... அவங்க பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க‘ என்கிறாராம். இதைக் கேட்டு சசியும் விவேக்கும் டென்ஷனில் இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் பிரசார களைப்பில் ஹாயாக இருக்கிறார் தினகரன்.

தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரைக்கூட தினகரன் எங்கேயும் சொல்லவில்லை, இது குறித்து சசி விளக்கம் கேட்டபோது, ‘இன்னமும் மக்களிடம் உங்களுக்கு கெட்ட பெயர் இருக்கிறது, அதனால்தான் பேசவில்லை’ என்றாராம். அப்படின்னா இவருக்கு என்ன பெயர் இருக்கிறது என்று புரியாமல் தவிக்கிறார் சசி.