பிரபல நடிகையுடன் ஒரே அறையில் தங்கிய விஷால்? கையும் களவுமாக பிடித்த அனிஷா? திருமணம் நின்று போனதன் பின்னணி!

பிரபல நடிகையுடள் ஒரே அறையில் நடிகர் விஷால் தங்கியிருந்ததை கண்டுபிடித்த காரணத்தினால் தான் அனிஷா தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது.


நயன்தாராவை எப்படியாவது பிராக்கெட் போட்டுவிட வேண்டும் என்று துவக்கத்தில் விஷால் சீரியசாக இருந்தார். ஆனால் விஷால் விளம்பரத்திற்காகவே தன்னை சுற்றுவதை தெரிந்து கொண்டு நயன்தாரா பிடிகொடுக்கவில்லை. இதன் பின்னர் வரலட்சுமியுடன் விஷால்லிவிங் டுகெதர் இருந்தது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் லட்சுமி மேனனுடன் விஷால் நெருங்கியதால் வரலட்சுமியுடனான உறவு முறிந்ததாக சொல்லப்பட்டது. இதன் பிறகு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் விஷால் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வந்தார். இந்த நிலையில் வரலட்சுமியுடன் மீண்டும் நட்பானார் விஷார்.

யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஐதராபாத் தொழில் அதிபர் மகள் அனிஷா அல்லா ரெட்டியுடன் விஷாலுக்கு பிரமாண்ட நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபரில் திருமணம் என்று கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் அனிஷா. இதனால் விஷால் திருமணம் நின்று போய்விட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் தான் சமூக வலைதளங்களில் வைரல்.

ஆனால் இது குறித்து இரு குடும்பத்தாரும் தற்போது வரை வாய்திறக்கவில்லை. இதற்கிடையே விஷால் – அனிஷா திருமணம் நின்று போய்விட்டதாக அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் பெயர் வெளியிட விரும்பாமல் கூறி வருகின்றனர்.

விஷால் நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது தெரிந்தாலும் நிச்சயத்திற்கு பிறகு மாறிவிடுவார் என்று அனிஷா நம்பியதாக சொல்கிறார்கள். ஆனாலும் விஷால் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் லூட்டி அடிக்கும் தகவல் அனிஷாவுக்கு கிடைத்ததாகவும் இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்த தனியார் இன்வெஸ்டிகேடிவ் ஏஜென்சி ஆட்களை அனிஷா நியமித்ததாகவும் சொல்கிறார்கள்.

அண்மையில் காமெடி படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்ற விஷால் அங்கு படத்தில் தனது ஜோடியாக நடிக்கும் நடிகையுடள் ஒரே அறையில் தங்கியதாக கிசுகிசு நிலவுகிறது.

இதனை இன்வஸ்டிகேடிவ் ஏஜென்சி நபர்கள் ஆதாரத்துடன் அனிஷாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்தே நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கி அனிஷா விஷாலுடனான திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.