ஒரே டென்சன்! போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டருக்கு பேன் பார்க்கும் குரங்கின் வைரல் வீடியோ! எங்கு தெரியுமா?

உத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் தலையில் அமர்ந்து குரங்கு பேன் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியின் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் காவலர் ஸ்ரீகாந்த திவேதி. இவர் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு மிகவும் பிஸியாக வழக்கு விவரம் சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வந்த குரங்கு ஒன்று காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.

அங்கு முக்கிய வேலையில் இருந்த காவலர் ஸ்ரீகாந்த திவேதியை பார்த்த குரங்கு என்ன நினைத்ததோ தெரியவில்லை. உடனடியாக டேபிள் மீது ஏறி பின்னர் ஸ்ரீகாந்த திவேதி தோள்பட்டை மீது அமர்ந்து கொண்டது. அதோடு விடாமல் அவருக்கு தலையில் பேன் ஏதாவது கிடைக்கிறதா என பார்க்கத் தொடங்கி விட்டது.

வழக்கமாக மனிதர்கள் எப்படி பேன் பார்ப்பார்களோ அதுபோலவே குரங்கு பேன் பார்த்த வீடியோ பலரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி குரங்கின் சேட்டையை பொருட்படுத்தாத காவலர் ஸ்ரீகாந்த திவேதியும் தனது பணிகளை கவனித்து வருவது, மேலும் பலரை சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

விலங்குகள் எப்போதுமே மனிதர்களுடன் இணங்கி செல்லத்தான் பார்க்கிறது. ஆனால் அது தெரியாமல் விலங்குகள் தமக்கு ஆபத்து விளைவிப்பதாக கருதி அதை துன்புறுத்துகின்றனர். அல்லது கொன்று விடுகின்றனர். எனவே இனியாவது விலங்குகளை அந்நியமாக நினைக்காமல் அன்போடு பழகுங்கள். அதற்காக புலியை அழைத்து வந்து புளியோதரை போட்டுவிடாதீர்கள். உங்களுக்கு வாய்க்கரிசி போடுவதற்குக் கூட வாய் இருக்காது.