ஆர்மோனிய இசைக்கு ஏற்ப பாடல் பாடும் தெரு நாய்..! காண்போரை திக்கு முக்காட வைக்கும் வீடியோ!

வடமாநிலைத்தை சேர்ந்த ஒருவர் ஆர்மோனியத்துடன் இசை அமைக்க அந்த இசைக்கு ஏற்ப பாடுவதை கேட்டு அவருடன் சேர்ந்து நாயும் பாடும் அழகிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் அதனை பகிர்ந்தும் வருகிறார்கள்.


பாலிவுட்லில் பிரபல பாடகி ரானு மோன்டால் பாடிய தேரி மேரி கஹானி பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த நிலையில், அதே பாடலை ஆர்மோனிய இசையுடன் ஒருவர் பாட அவருடன் சேர்ந்து அவரது வளர்ப்பு நாய் ஒன்றும் இசைக்கு இணைந்து பாடல் பாடுகிறது. தொடர்ந்து அவர் ராகத்தை இழுக்கும்போது, தானும் பாடவேண்டும் என்ற நோக்கில் நாய் ஊளையிட்டு தனது பாடல் பாடும் திறமையை வெளிக்காட்டியது.  

இவ்வாறு இந்த நாய் பாடியதை வீடியோ மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து இருந்தன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த காட்சிகளை கண்ட பொதுமக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் பகிர்ந்தும் வருகிறார்கள். மேலும், இந்த வீடியோ எங்கே, எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.