சஷ்டி விரதம் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படித்து..! அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தி..! விஜயகாந்த் பராக் பராக்..

உடல்நிலை சரியில்லாமல், வெளியே தலைகாட்டாமல் இருந்துவந்த விஜயகாந்த் திடீரென ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.


நேற்று, அவர் ஆடி மாதம் சஷ்டி விரதம் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படித்தார். இதுகுறித்து அவர், ’வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதுகுறித்து விஜயகாந்த் டிவிட்டரில், ‘நீங்கள் உறங்கும் போது வருவது கனவல்ல உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! போன்ற பல பொன்மொழிகளை, எப்போதும் உயரிய லட்சியத்துடன் வாழ வேண்டும் என்ற கொள்கைகளை, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதித்து, மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து, வழிகாட்டியவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள். 

இன்று அவரது 5ம் ஆண்டு நினைவு நாள், அவரது நினைவை போற்றி, கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று கூறியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் விஜயகாந்த் உடலும், உள்ளமும் ரெடி என்கிறார்கள் அவரது கட்சிக்காரர்கள்.