அக்கா எவ்வழியோ? தங்கையும் அதே வழி..! விஜய் டிவி தொகுப்பாளினியின் அந்தரங்கம் இது அந்தரங்கம்!

விஜய் டிவி என்றாலே நம் நினைவிற்கு வந்து நிற்க கூடிய முகங்களில் இவரது முகம் மிகவும் முக்கியமானது. அந்த தொகுப்பாளினியின் அந்தரங்கம் பற்றிய கிசுகிசு தான் இது.


தொலைக்காட்சி உலகில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமே கோலோச்சி வந்த காலகட்டத்தில் தெற்கே இருந்து வந்து வெற்றிக் கொடி நாட்டியவர் நம் தொகுப்பாளினியின் சகோதரி. அப்போது முன்னணி தொலைக்காட்சியாக இருந்த சன் டிவி, ஜெஜெ டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என இவர் பணியாற்றாத தொலைக்காட்சிகளே இல்லை. 

அக்காவை பின்பற்றி தங்கையும் டிவி தொகுப்பாளினி ஆகிவிட்டார். ஆனால் அக்காவை போல் எல்லா சேனல் பக்கமும் போகாமல் ஒரே சேனலை உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டார். சேனல் மூலமாக தொகுப்பாளினியும், தொகுப்பாளினி மூலமாக சேனலும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

முன்னணி ஹீரோக்கள் வெளிப்படையாகவே இவரிடம் ஜொல்விட, அதை எல்லாம் சொல்லி சொல்லியே சேனலின் உச்சத்திற்கு சென்றார். ஒரு கட்டத்தில் ஏழு கழுதை வயதாகிவிட பெற்றோரின் ஓயாத தொல்லையால் தனது பேச்சுலர் வாழ்க்கைக்கு விடை கொடுத்து குடும்ப குத்துவிளக்கு ஆனார். ஆனால் பாருங்கள் சில மாதங்களிலேயே கணவனுக்கு குட் பாய் சொல்லிவிட்டு மீண்டும் சின்னத்திரையுலகிற்கு வந்துவிட்டார்.

இந்த முறை ஒரு படி மேலே சென்று சினிமாவிலும் திறமை காட்ட ஆரம்பித்தார். இதற்கிடையே 2வது கல்யாணம் செய்து கொள் என்று வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் தொல்லையை ஆரம்பிக்க, அக்காவும் தான் விவகாரத்து வாங்கிட்டா, அவ என்ன 2வது கல்யாணமா பண்ணிகிட்டா? என்று நக்கலாக கேட்டுவிட்டு மீண்டும் தனது பேச்சுலர் அத்தியாத்தை தொடங்கியுள்ளார் நம்ம தொகுப்பாளினி.