விஜய் மேடையில், சிக்ஸர் அடித்த விஜய் சேதுபதிக்கு பெரிய இடத்தில் இருந்து பாராட்டு!

மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் சேதுபதி மக்கள் நலன் குறித்துப் பேசிய விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாக போய் சேர்ந்துள்ளது. ஆம், கொரோனோ குறித்தும் மத அரசியலையும் சிம்பிளாக திட்டித் தீர்த்துவிட்டார்.


இரண்டு வைரஸ்கள் என கொரோனாவையும், மதவெறியையும் பற்றி மிக எளிமையான வார்த்தைகளில் பேசிய விஷயமும், விதமும் அவர் மீது பெரும் அன்பை செலுத்தத் தோன்றுகிறது. மதத்தைவிட மனிதனும் மனிதமும்தான் முக்கியம் என்பதை பா.ஜ.க.வினருக்கு நெத்தியடியாக சொல்லியிருக்கிறார்.

மனிதரைப் போற்றுங்கள், மனிதரை நம்புங்கள். கடவுளையோ கடவுள் பெயரில் அரசியல் செய்பவர்களையோ நம்பவே வேண்டாம் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. இத்தனைக்கும் அவர் கைதட்டல் வாங்குவதற்கோ அல்லது திட்டமிட்டு பேசியதாகவோ இல்லாமல் இயல்பாகப் பேசியிருக்கிறார்.

ஆடியோ ரிலீஸ் என்றால் அந்த படத்தின் ஹீரோவுக்கு ஆதரவாகத்தான் கூட்டமாக இருக்கும். ஆனால், மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் முதன்முறையாக விஜய்யைத் தாண்டி ஜெயித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் பேச்சைக் கேட்டு தமிழகத்தின் முக்கியக் கட்சித் தலைவர் ஒருவர் பாராட்டிப் பேசினாராம். தன்னுடைய பாராட்டை வெளியே சொன்னால், குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர் என்ற பெயர் வந்துவிடும், அதனால் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அன்பு பாராட்டினாராம்.

ஆனந்தத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி.