காவி வேட்டியில் கிறிஸ்தவர் விஜய்! கொந்தளித்த தந்தை எஸ்ஏசி! பிரஸ் மீட் பரபரப்பு!

மகன் விஜய் காவி வேட்டியுடன் பிகில் படத்தில் நடித்திருக்கும் தகவல் அறிந்து எஸ்ஏசி கொந்தளித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் மனைவி சோபா கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர். காதல் திருமணத்திற்கு பிறகு எஸ்ஏசி கிறிஸ்தவ மதத்தை தழுவினார். இதன் பிறகு வாரம் தவறாமல் எஸ்ஏசி தேவாலயம் சென்றுவிடுவார்.

அவ்வப்போது இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் விமர்சித்து பேசும் அளவிற்கு கிறிஸ்தவ மதம் மீது எஸ்ஏசிக்கு ஈர்ப்பு அதிகம். அதனால் தான் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்த போது கூட அவரது டிரேட் மார்க் விபூதி குங்குமத்தை வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார் எஸ்ஏசி.

பிறகு கிராபிக்ஸ் மூலமாக அவரது புகைப்படங்களுக்கு குங்குமம், விபூதி வைக்கப்பட்டது. இந்த அளவிற்கு கிறிஸ்தவ மதத்தை எஸ்ஏசி பின்பற்றி வரும் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பட விழா ஒன்றில் பேசினார். அப்போது இனி இந்தியாவில் எல்லாம் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலைய வேண்டியது தான் என்று கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அண்மையில் வெளியான பிகில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் எஸ்ஏசி மகன் விஜய் காவி வேட்டியில் போஸ் கொடுத்திருந்தார். இது குறித்து கேப்மாரி படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போதுஎஸ்ஏசியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கேள்வியை முடிக்கும் முன்பே எஸ்ஏசி டென்சன் ஆகிவிட்டார். அவர் காவி வேட்டி கட்டியிருந்தால் அவரிடம் போய் கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தினார். செய்தியாளர்கள் சமாதானம் செய்து அதே கேள்வியை கேட்க விஜயை பத்தி என்னிடம் கேட்காதீர்கள், என் படத்தை பற்றி மட்டும் கேளுங்கள் என்று கடுப்பு வேறு அடித்தார் எஸ்ஏசி.

இதன் மூலம் காவி வேட்டி விவகாரத்தால் தந்தை மகனுக்கும் ஏதேனும் பிரச்சனையான என்று கூட செய்தியாளர்கள் பேசிக் கொண்டே சென்றனர்.