தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டாவுக்கு ரொம்பவே பயமாம்! அதுக்கு அவர் என்ன செஞ்சார் தெரியுமா?

இவர் தமிழில் ”நோட்டா ” படத்தின் மூலம் அறிமுகமானார் .தெலுங்கு நடிகர் என்றாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் எக்க்கச்சகம் .மேலும் விஜய் தேவரகொண்டா தற்போது தனது ‘வேல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.
அடுத்ததாக தமிழில் இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை உடன் இணைந்தும் ஒரு திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.மிகப்பெரிய வீட்டை ஹைதராபாத்தில் வாங்கிவிட்டேன்.
ஆனால், பெரிய வீடு பயமாய் உள்ளது, என்று சமூக வலைதளப் பக்கத்தில் புலம்பிய அவர், பயத்துக்கான தீர்வாக அம்மாவை தன்னுடன் அழைத்து வந்துவிட்டதாக தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். மேலும் ,எங்களுக்கான பாதுகாப்பான உணர்வை அம்மா தருவார்.
இந்த கட்டடத்தை வீடாக மாற்றுவது அம்மா மட்டுமே. புதிய வீடு அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்களது பயணத்தில் ரசிகர்களாகிய நீங்களும் இருக்கிறீர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.