பிரமாண்ட மலை உச்சியில் இருந்து வெட்டிக் கிளம்பிய மின்னல்! பீதியில் உறைந்த மக்கள்!

மெக்சிகோ: மரம் போல கீழே இருந்து மேல் நோக்கி கிளை விட்டுச் சென்ற மின்னல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


மத்திய அமெரிக்கடா நாடான கவுதமாலாவில்தான் இந்த வியப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வோல்கன் டி அகுவா பகுதியில் மலை உச்சியில் நிகழ்ந்த இந்த மின்னலை, அலிஸா பருண்டியா என்பவர் படம்பிடித்துள்ளார்.

இதுபற்றி தி இன்டிபெண்டன்ட் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள பருண்டியா, ''இதுபோல மின்னல் நிகழ்வது 2வது முறையாகும். ஏற்கனவே ஒருமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது.

அதனால்தான், 2வது முறை நிகழும்போது முன்னெச்சரிக்கையாக காத்திருந்து உடனடியாக படம் பிடித்தேன். இது எனக்கு மிகவும் வியப்பான சம்பவமாக உள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதுதொடர்பாக, தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அலிஸா பருண்டியா (https://www.facebook.com/alyssa.beyer.71/posts/2387191564705538)  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மின்னல் வெட்டும் புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. அதனை பார்க்கும்போது, மலை ஒன்றின் உச்சியில் கீழே இருந்து பளிச்சிடும் மின்னல் அப்படியே ஒரு மரம் போல படிப்படியாக கிளை விட்டு பரவி பெரிய ஆலமரம்போல காட்சியளித்து பின்னர் மறைகிறது. இது விஞ்ஞான ரீதியாகவே ஒரு அதிசய நிகழ்வாக பலராலும் கருதப்படுகிறது.