பேருந்தில் காதலனுடன் எல்லை மீறிய இளம் பெண்! வீடியோ பதிவு செய்து டிரைவர் செய்த பகீர் செயல்! சேலம் திகுதிகு!

சேலம் மாவட்டத்தில் மாணவி ஒருவரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து வைரலாக்கிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


நாமக்கல மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் செவிலியர் பயிற்சி முடித்து அதே கல்லூரியில் பெண் ஒருவர் ஆடை இல்லாமல் வாட்ஸ்அப் காலில் பேசும் காட்சிகள் வைரலாகி வந்தது. இதை பார்த்த செவிலியர் போலீசிடம் சொன்னால் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடும் என்று அஞ்சி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து செவிலியரின் பெற்றோர் வாட்ஸ்ஆப் வீடியோ குறித்து சேலம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செவிலியர் தற்போது பணிபுரியும் கல்லூரியில் படிக்கும்போது பேருந்தில் சக மாணவரு பேசிக் கொண்டு சென்றுள்ளார்.

இதை படம்பிடித்த வரதராஜன் என்பவர் ஆண் நண்பர்களுடன் சுற்றுவதாக வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். வெளியில் சொல்லக் கூடாது என்றால் தன்னுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச வேண்டும் என்பது மட்டுமல்லாமல் ஆடையில்லாமல் பேசவேண்டும் என மிரட்டி உள்ளான்.

அவனின் மிரட்டலுக்கு பயந்து வேறு வழி தெரியாமல் நிர்வாணமாக நின்றபடி வாட்ஸ்அப் காலில் பேசியுள்ளார் அந்தப்பெண். இதை வரதராஜன் வாட்ஸ்ஆப் மூலம் செல்போனில் பதிவு செய்து கொண்டான். பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு புது மிரட்டல் விடுத்துள்ளான்.

அவனுடைய எண்ணணை புரிந்து கொண்ட மாணவி வரதராஜனுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வரதராஜன், கல்லூரி பேருந்து ஓட்டுனர் விஜயகுமாரிடம் மாணவி நிர்வாண வீடியோவை பகிர அவனும் அந்த வீடியோவை அவனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான்.

இந்த நிலையில் வீடியோ பதிவு செய்து மிரட்டிய வரதராஜன் தலைமறைவாகிவிட கல்லூரி பேருந்து ஓட்டுனர் விஜயகுமார் , சங்கர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்று யாராவது புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டினால் பெண்கள், மிரட்டலுக்கு அஞ்சமால் உடனடியாக போலீசில் புகார் அளித்தால் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் இருந்து பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.