வேலூரில் தோத்தா கேவலம்! நிர்வாகிகளை உசுப்பேத்தும் ஸ்டாலின்!

மோடியின் எதிர்ப்பலையினால்தான் தி.மு.க. ஜெயித்தது என்று திட்டமிட்டு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.


அது உண்மையா இல்லையா என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போது வேலூரில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க.வில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறார். “நாம் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது போன்று மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பேசுகிறார். அவர் சொல்றது பொய்யின்னு நாம நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதனால, நாம் வேலூர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் நாம் ஏற்கனவே பெற்ற வெற்றிக்கும் அர்த்தம் இல்லாமப் போயிடும். எல்லாரும் கவனமா தேர்தல் வேலைகளைப் பாருங்கள். இந்த வெற்றிதான் நம்முடைய உண்மையான வெற்றியா இருக்கும்’’ என்று உசுப்பேற்றி இருக்கிறார். 

ஏ.சி.சண்முகம் சீரியஸாக வேலை செய்வதையும், ஜெயித்தால் அமைச்சராகிவிடுவேன் என்று சொல்வதைக் கேட்டும் மக்கள் மாறி ஓட்டுப் போட்டுவிடக் கூடாது என்று துரைமுருகன் பயந்து போய் இருக்கிறாராம். அதனாலே, இப்படி ஸ்டாலின் பேசி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் பணம் செலவழிக்க வேண்டாம் என்று தி.மு.க. முடிவு செய்திருக்கிறதாம். பார்க்கலாம்.