நாடாளுமன்றத்தில் தேம்பி தேம்பி அழுத வெங்கய்யா நாயுடு! நெகிழ வைக்கும் காரணம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயபால் ரெட்டி மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்ட போது அவர் தனது நீண்ட கால நண்பர் எனக்கூறி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவையிலேயே உணர்ச்சிவசப்பட்டு அழுதார்


காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயபால் ரெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தொடர்பான இரங்கல் குறிப்பை மாநிலங்களவையில் படித்த வெங்கையா நாயுடு உணர்ச்சிவயப்பட்டார்

எழுபதாம் ஆண்டுகளில் ஆந்திர மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்த போது இருவரும் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். அவை 8 மணிக்கு தொடங்கும் நிலையில் தாங்கள் இருவரும் காலை 7 மணிக்கே வந்து தங்கள் காலை உணவுடன் அரசியல் மக்களுக்கான திட்டங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.

ஜெயபால் ரெட்டி தன்னை விட ஆறு வயது மூத்தவர் என்ற அவர் தனது நண்பராக மட்டுமன்றி வழிகாட்டியாகவும் சிறந்த தலைவராகவும் விளங்கியவர் ஜெயபால் ரெட்டி என்று வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். ஜெயபால் ரெட்டி மறைவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

அப்போது கட்டுப்படுத்த முடியாமல் ஜெயபால் ரெட்டி அழ ஆரம்பித்துவிட்டார். அவரை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தான் உணர்ச்சி வயப்பட்ட அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட வெங்கையா நாயுடு, 40 ஆண்டுகால நட்பு உடைய ஜெயபால் ரெட்டியின் மறைவை தன்னால் தாங்க முடியாததால் உணர்ச்சிவயப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.