கள்ளக்காதலி கைமாறியதால் ஆத்திரம்! 2வது கள்ளக்காதலனின் அந்த உறுப்பை அறுத்து கொடூர கொலை!

கள்ளக்காதலியை கைமாற்றிக் கொள்வதில் இரண்டு கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட பகையில் ஒருவர் அந்த உறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஏ.கே.மோட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார். திருமணமான இவருக்கு குட்டியம்மாள் எனும் விதவைப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் எல்லை மீறி கள்ளக்காதலனது. இருவரும் அவ்வப்போது தனிமையில் இனிமை கண்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் தனியாக வீடு எடுத்து குட்டியம்மாள் மற்றும் அவரது மகன்களை குடித்தனம் வைத்து அவர்களோடு சிவக்குமார் தங்கியுள்ளார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே சிவக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிவக்குமாரை வெட்டி கொலை செய்ததுடன் அவரது மர்ம உறுப்பையும் அறுத்து எரிந்துள்ளனர். மேலும் கல்லை அந்த இடத்தில் போட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு குட்டியம்மாள் கொடுத்த தகவல் திடுக்கிட வைப்பதாக இருந்தது. சிவக்குமாருக்கு முன்னதாக குட்டியம்மாள் புதுப்பூங்குளம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.

பழனி வெளியூர் சென்ற நிலையில் குட்டியம்மாளை சிவக்குமார் தன் வசப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் ஊர் திரும்பிய பழனி, குட்டியம்மாளுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். ஆனால் இதற்கு சிவக்குமார் இடையூறாக இருந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குட்டியம்மாள் மற்றும் சிவக்குமாரை கொலை செய்ய பழனி கூலிப்படையை ஏவியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குட்டியம்மாள் அன்றைய தினம் சிவக்குமாருடன் இல்லை. இதனால் உயிர் தப்பியுள்ளார்.

குட்டியம்மாளுடன் கள்ளக்காதலில் இருந்த இருவரில் ஒருவர் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.