ஓடிப்பிடித்து விளையாடிய இரண்டு சிறுமிகளுக்கு ஏற்பட்ட திடீர் மரணம்! வேலூர் கண்ணீர்

வேலூரில் பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கேஜி ஏரியூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வேலூ இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள்களான ஹரிணி(6), பிரித்திகா(3) தனது வீட்டின் அருகே இருவரும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இருவரும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த சாண எருவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல இருந்துள்ளது. இந்நிலையில் அதை அறியாத இரு குழந்தைகள் பள்ளத்தில் கால் தடுக்கி விழுந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் அந்தப் பள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தனது குழந்தைகளை காணவில்லை என மேலும் தேட ஆரம்பித்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே சென்று பார்த்த போது இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றும் சாணஎருவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விரைவில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமுடன் கவனித்துக்கொள்ளும்படி பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி சென்றுள்ளார். மற்றும் பரிதாபமாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறியுள்ளார்.