பரூக் அப்துல்லாவை கண்டுபிடிச்சுக் குடுங்க..! நீதிமன்றத்தில் வைகோ!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையொட்டு, தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகும், இன்னமும் யாரும் கைது செய்யப்படவில்லை.


இன்னமும் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை, அங்கே கடைகள் அடைக்கப்பட்டுள்ளன, மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்துவரும் வேளையிலும், இதுகுறித்து மோடி அரசு எந்தத் தகவலும் வெளியே தெரிவிக்கவில்லை.

இப்போதும் காஷ்மீர் செல்வதற்கு தடை இருக்கிறது. இந்த நிலையில்தான் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தருமாறு வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ‘சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஏற்கெனவே பரூக் அப்துல்லாவிடம் கூறியிருக்கிறேன். இப்போது அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வைகோ எடுத்துள்ள நகர்வு அனைத்து இந்தியா அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசுக்கு சாதகமாக வைகோ நடந்துவருகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்படியொரு முடிவு எடுத்து தன்னுடைய தனித்தன்மையைக் காட்டியிருக்கிறார் வைகோ.