காங்கிரஸ் - வைகோ மோதல் உச்சகட்டம்! வேடிக்கை மட்டும் பார்க்கும் ஸ்டாலின்! புதிய கூட்டணி உருவாகிறதா?

வைகோ உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடியவர், உடனே பல்டி அடிக்கக்கூடியவர் என்பதெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.


வைகோ உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடியவர், உடனே பல்டி அடிக்கக்கூடியவர் என்பதெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர் பேசுவதை தமிழக மக்கள் அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. 

ஸ்டாலின் தலைவராக வரக்கூடாது என்று சொல்லி கட்சி தொடங்கிய வைகோ, இப்போது உதயநிதி  ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று குரல் கொடுக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். 

இந்த நிலையில்தான் காங்கிரஸை வசைபாடி மாநிலங்களவையில் வைகோ பேசிய பேச்சு குறித்து,  ஸ்டாலின் வசம் காங்கிரஸ் புள்ளிகள் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வதை தட்டிக்கேட்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், ஸ்டாலின் இதுவரை வாயையே திறக்கவில்லையாம். ஆக, அவரும் காங்கிரஸ் மீது மெகா கோபமாகத்தான் இருக்கிறாரோ..?