ஒரே ஒரு சிறுமி! 7 பேர் மாறி மாறி பலாத்காரம்! கடைசியில் அரங்கேறிய கொடூரம்!

செங்கல் சூளையில் பணிபுரிந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அந்த சிறுமியை செங்கல்சூளை உரிமையாளரும், அவருடன் சேர்ந்து ஆறு பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதை அந்த சிறுமி வெளியில் சொல்லி விடுமோ என அஞ்சி செங்கல் சூளையில் வைத்து தீ வைத்து எரித்துக் கொன்று விட்டனர். சனிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் செங்கல் சூளையில் கருகிய நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து செங்கல் சூளை உரிமையாளரையும் அவருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இது ஒருபுறம் இருக்க அதே மாவட்டத்தில் உள்ள பப்புரா கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். அமித் குமார் என்ற அந்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.