கிட்னி குழாயில் பிரச்சனை! அந்தரங்க உறுப்புக்கு பதில் முதுகு துவாரம் வழியாக சிறுநீர் கழிக்கும் சிறுவன்! உதவிக்கு ஏங்கும் பரிதாப நிலை!

10 வயது சிறுவனுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக வயிற்றில் துளையிட்டு சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் நிதி உதவி கோரி சிறுவன் மனு கொடுத்துள்ளார்.


கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்ற 10 வயது சிறுவனுக்கு தாய் இல்லை. தந்தையும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுவயதிலிருந்தே பிரசன்னா அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்துள்ளது தற்போது அந்த கோளாறு முதிர்ச்சி அடைந்தது எடுத்து சில நாட்களாக சிறுநீர் வெளியேற வில்லை உடனடியாக மருத்துவரை சந்தித்துள்ளார் பிரசன்னா.

தற்காலிகமாக சிறுநீர் வெளியேற வயிற்றுப் பகுதியில் துளையிட்டு சிறிய அளவில் ஆபரேஷன் செய்துள்ளனர் மருத்துவர்கள். சிறிய வயது என்பதால் மேஜர் ஆபரேஷன் செய்ய கூடாது எனவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பிரசன்னா பெரியவன் ஆனதும் ஒரு ஆபரேஷனை செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

சிறுவன் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் உரிய நிதி உதவி மற்றும் பொருளுதவி இல்லை. இதனை செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் சிறுவன் பிரசன்னா மனு கொடுத்திருக்கிறார். இதனை கவனித்த மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.