சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் உப்புமா கதை! வாக்களிக்கும் முன் கண்டிப்பா இத படிங்க!

ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டு வந்தது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள்.


ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டு வந்தது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள்.  எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமாவில் பழக்கப்பட்ட 20 பேர் அதற்கு வாக்களித்தனர். 

ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 18 பேர் இட்லிக்கு 15 பேர் பூரிக்கு 17 பேர் பொங்கலுக்கு 14 பேர் என வாக்களித்தனர். எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமா வே உணவாக அளிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பலருக்கு பிடிக்காத உப்புமாவே காலை உணவாக அமைந்தது.

மாற்றம் நிகழ வேண்டும் என்றால் மாற்றம் செய்ய நினைப்பவர்களிடம் ஒற்றுமை முதலில் இருக்க வேண்டும். பல போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம், எதிரிகளின் வலிமை அல்ல, நம்முடைய ஒற்றுமை இல்லாமையே காரணமாக விளங்குகிறது. இல்லையெனில் மீண்டும் உப்புமாதான் !

சிந்தித்து ஒன்று சேர்ந்து 100 % வாக்களிப்பீர்.