அடுத்த வாரம் கல்யாணம்! ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்த காதலி! நேரில் பார்த்த காதலன்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

உக்ரேன் நாட்டில் திருமண நிச்சயம் செய்யபட்டிருந்த காதல் ஜோடியின் கதை சோகமாக முடிந்துள்ளது.


உக்ரைனின் 22 வயதே ஆன அனஸ்தேசியா , விட்டாலி என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார், இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொள்ள நிச்சயம் செய்யபட்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி காரசார விவாதங்கள் ஏற்பட்டுள்ளது.

அனஸ்தேஸியா, விட்டலிக்கு தெரியாமல் மற்ற வாலிபர்களுடன் நெருக்கமாக பழகி வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன உளைச்சலில் இருந்த விட்டாலி, காதலியுடன் இது பற்றி கேட்டு விவாததிக்க அதில் மனம் உடைந்த அனஸ்தேசியா வீட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விட்டாலி கதவின் ஓரத்தில் இருந்த காதலியின் மீது பெட்ரோலை ஊத்தி பத்தவைக்க, அவர் அலறி துடித்துள்ளார், தவறை உணர்ந்து காப்பாற்ற நினைத்த போது அதற்குள்ளாக அவர் 90 %  தீக்காயம் கொண்டுள்ளார்.உடனடியாக விரைந்த போலீசார் காதலன் விட்டாலிதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.