உருகும் இமயம்! கிடுகிடுவென் அதிகரிக்கும் கடல் நீர்! சென்னைக்கு பேராபத்து!

இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கடல் வெப்பமடைவதே புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை அளித்துள்ளது.


33.25 கோடி கன மைல் அளவு கொண்ட கடல், பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்து வருகிறது. ஆனால் தற்போது ஐநாவும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் விடுத்துள்ள அறிக்கை இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்து உள்ளது.  

36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவி புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து தாக்கல் செய்த அறிக்கையை ஐநா வெளியிட்டது. இந்த அறிக்கையில், பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் கடல் வெப்பமடைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் வில்லிஸ் எச்சரித்துள்ளார்.

கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைத்தால் மட்டுமே மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க முடியும் என ஐநா-வின் இன்டர்கவர்ன்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடல் நீர்மட்டம் உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கடல் நீரில் அதிகரித்து வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம், சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.