செம லாபத்தில் உஜ்ஜிவன் வங்கி! அடேங்கப்பா ஆர்டர்கள்!

சாதனை படைத்தது உஜ்ஜிவன் சிறு கடன் வங்கி. கடந்த 2017ல் தொடங்கப்பட்ட உஜ்ஜிவன் வங்கி. செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் சுமா 1800 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் பங்குச் சந்தை மூலமாக சுமார் 750 கோடி அளவிற்கு நிதி திரட்ட உத்தேசித்த இந்த நிறுவனம்.கடந்த வாரம் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. ஐபிஓ அறிவித்த மூன்று நாட்களில் 165 மடங்கு ஆர்டர்களை பெற்றது உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி. இதன் மூலமாக சுமார் 76 ஆயிரம் கோடி அளவுக்கு பங்குச் சந்தையில் நிதி திரட்டியுள்ளது இந்த நிறுவனம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. 36 மற்றும் 37 ரூபாய் விலையில் வழங்கப்பட்ட பங்குகள், தொடக்க நாளான இன்று 60% லாபத்துடன் பிஎஸ்இயில் ₹ 58 ரூபாய்க்கு விற்பனை தொடங்கியது. 

முறையே முதல் நாள் வர்த்தக முடிவில் 55.90 ரூபாயாகவும். என்எஸ்இயில் 51.08 சதவிகித லாபத்தை கொடுத்து முடிவடைந்தது இதன் பங்குகள். கடந்த திசம்பர் 2 முதல் 4 வரை தொடங்கப்பட்ட பங்குச் சந்தைக்கு முந்தைய விற்பனையில். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட. 165 மடங்கு ஐபிஓ மூலமாக ஆர்டர் குவிந்ததால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த வங்கி.

மேலும் கடந்த 2018 ஜனவரி மாதத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஐபிஓக்களில் 165 மடங்கு விற்பனையாகிய முதல் நிறுவனம் என்ற சாதனையை எட்டியுள்ளது உஜ்ஜிவன் சிறு வணிக கடன் வங்கி.  நாடு முழுவதும் சுமார் 500 கிளைகள் கொண்ட இந்த வங்கி கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி