துண்டு சீட்டு இல்லாமல் அதிமுக-பாஜகவை தெறிக்கவிடும் உதயநிதி! உங்க வீட்டுக்கும் வர்றாராம்! வைரல் வீடியோ!

கையில் துண்டு சீட்டு இல்லாமல், எதிரே மானிட்டரை பார்த்து படிக்காமல், நிறைய கட் வாங்கியிருந்தாலும், தெளிவான வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார் உதயநிதி.


இந்தித் திணிப்புக்கு எதிராக பொங்கியிருக்கும் உதயநிதி இளைஞர் அணிக்கு ஆள் சேர்க்க வீடு தேடி வர இருக்கிறாராம்.இந்த வீடியோவில் அ.தி.மு.க.வினரை அடிமைகள் என்று மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்கிறார். இந்த அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டிய நிலையில் தி.மு.க. இருக்கிறது என்பதால், எல்லோரும் இளைஞர் அணியில் இணைய வேண்டும் என்கிறார்.

அதேபோன்று, ஆளும் பா.ஜ.க. இந்தியை திணிக்க முயல்வதையும், எதிர்த்துப் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதையும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் உதயநிதி. பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருக்கும் நிலையை சுட்டிக் காட்டுகிறார். 

புதிய கல்விக் கொள்கை, காஷ்மீர் நிலவரம், நீர் மேலாண்மை என்று சகல விஷயம் குறித்தும் உதயநிதி பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கேட்டுப் பாருங்க. ஸ்டாலின் கேட்டா ரொம்பவும் டென்ஷன் ஆவார் என்பது நிச்சயம். துண்டு சீட்டு இல்லாம நீள நீளமா பேசுறாரே...