தி.மு.க. இளைஞரணித் தலைவராகிறார் உதயநிதி! 41 வயதில் இந்த அபசகுனம் தேவைதானா?

திராவிட முன்னேற்றக் கழகத்தில் எல்லாமே நியாயப்படியும், தர்மப்படியும் நடப்பதாக சொல்வார்கள். அப்படியே மக்களை நம்பவைக்கவும் செய்வார்கள். இது காலம் காலமாக நடந்துவரும் கண்ணாமூச்சு விளையாட்டு.


அதன்படி, இப்போது ஒட்டுமொத்த தி.மு.க. நிர்வாகிகளின் ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. தலைமை இருக்கிறதாம், அதாவது ஸ்டாலின் இருக்கிறாராம். ஓ... உடனடியாக அ.தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க. ஆட்சியைக் கொண்டுவருவது என்று நினைக்கிறீர்களா..?

அதுதான் இல்லை. தி.மு.க.வின் எதிர்காலம், மூன்றாம் கலைஞர், திராவிடத்தின் ஒரே வாரிசு, நடிப்புக் களஞ்சியமாகத் திகழும் உதயநிதி ஸ்டாலினுக்கு, கட்சியில் இளைஞரணித் தலைவர் பதவி கொடுக்கப் போகிறார்களாம். 

ஏனென்று கேட்டால், தினமும் இதுகுறித்து ஏராளமான தீர்மானங்கள் தலைமைக் கழகத்திற்கு வருகிறது என்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணித் தலைவர் பதவி தரவில்லை என்றால் தீக்குளிப்போம் என்று கோபமாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறார்களாம். அதனால், அவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக அந்தப் பதவியைக் கொடுக்கப் போகிறார்களாம்.

ஸ்டாலினுக்கும் இப்படித்தான் முதலில்  இளைஞரணித் தலைவர் பதவி கொடுத்தார்கள். அதன்பிறகு துணை முதலமைச்சர் வரையிலும் வந்தார். அதேபோல் உதயநிதியும் ஆஹோ, ஓஹோவென வருவார் என்கிறார்கள்.

அடப்பாவிகளா... அது ஒரு உருப்படாத பதவி, அந்தப் பதவிக்கு வந்ததாலத்தான் ஸ்டாலினால இன்னமும் முதலமைச்சர் ஆகவே முடியலை. எங்கேயோ கிடந்த பன்னீர், எடப்பாடி எல்லாம் முதலமைச்சர் ஆகிட்டாங்க. ஒழுங்கா, வேற எதாவது பதவி கேளுங்க என்று சென்டிமென்ட் பார்க்காத தி.மு.க.வினரே சிரிக்கிறார்கள்.

என்னப்பா... ஆரம்பமே அபசகுனமா இருக்கே.