பைக்கில் வேகம்! திடீரென தடுமாறிய கணவன்! அருகே வந்த பஸ்! நொடியில் பறிபோன பெண்ணின் உயிர்! சென்னை பதைபதைப்பு!

சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி உயிரிழந்தார்.


சென்னை அண்ணா சாலையில் எழிலரசி என்ற பெண் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா மேம்பாலம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைகுலைந்த எழிலரசியும், அவரது கணவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த சென்னை மாநகரப் பேருந்தின் சக்கரம் எழிலரசி மீது ஏறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே எழிலரசி உயிரிழந்தார். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வயதானவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து, வாடகை காரிலோ, ஆட்டோவிலோ சென்றால் விபத்தை தவிர்க்கலாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.