உடம்பு சரியில்லாத குழந்தை! பைக்கில் ஹாஸ்பிடலுக்கு பறந்த தந்தை! பின்னால் வந்த லோடு ஆட்டோவால் ஏற்பட்ட பயங்கரம்!

சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


நாமக்கல் ஆனங்கூரை சேர்ந்த சாந்தகுமாருடைய 3 வயது மகனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனை செல்ல முயற்சித்தபோது அதிகாலை என்பதால் பேருந்து எதுவும் இல்லை. எனவே தன்னுடைய நண்பரை இருசக்கர வாகனத்தை எடுத்த வருமாறு கூறினார்.

அவரும் சாந்தகுமார், அவரது மகன் ஆகியோரை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சங்ககிரி அடுத்துள்ள மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று சாந்தகுமார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.

இதில் குழந்தையுடன் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சாந்தகுமார் மற்றும் முருகன் ஆகியோர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சரக்கு வாகனம் மோதியதில் இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து வந்த சங்ககிரி போலீசார், காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சாந்தகுமார், முருகன் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.