முன்னே கார்..! பின்னால் மினி லாரி..! குறுக்கே வந்த பைக்..! நொடியில் நேர்ந்த விபரீதம்! எங்கு தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய பதைபதைப்பு விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


கர்நாடக மாநிலம் மங்களூர் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள அங்கூர் பகுதியின் சாலை ஒன்றில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே அதாவது சாலையின் இடதுபுறம் செல்லாமல் வலதுபுறமாக இளைஞர் ஒருவரை இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

அதிவேகமாக வந்த கொண்டிருந்த மினி லாரி ஓட்டுநர் திடீரென எதிரே தவறான பாதையில் இருசக்கர வாகனம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளைஞர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் அதில் வந்த ஜெடின் என்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமுற்ற இளைஞர் ஜெடின் மீட்கப்பட்டு, மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அங்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக் காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் போலீசால் கைப்பற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

சாலையில் வலதுபுறம் வாகனம் ஓட்டக்கூடாது என்று எவ்வளவுதான் போலீஸ் தெரிவித்தாலும் யாரும் திருந்திய பாடில்லை. தனக்கு விபத்து நேர்ந்தால் மட்டுமே திருந்துகின்றனர். தற்போது விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவேளை காப்பற்றப்பட்டால் இனி சாலை விதிகளை மதிப்பார் என எதிர்பார்ப்போம்.