எப்ப பாரு டிக்டாக் வீடியோ! மனைவி மற்றும் மச்சினிச்சியை தோசைக் கல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்! அதிர வைக்கும் காரணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் டிக் டாக் வீடியோவால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் அவரது தங்கை தோசைக்கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள கோதாவரி அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் சகோதரிகள் இருவர் தோசைக் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். ராய்பூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான மஞ்சு சிதார் மற்றும் மனிஷா சிதார் ஆகிய இருவரும் விடுதி அறையில் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து உடனே பதறிப்போய் அருகிலிருந்த உள்ளே சென்று பார்த்தபோது சகோதரிகள் இருவரும் தலையில் பலத்த காயத்துடன் தரையில் விழுந்து கிடந்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அருகிலுள்ள நபர்கள் உடனே மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சென்று அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல் துணை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் கொலை நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பரவிட காவல்துறையினர் விடுதி அறைக்குள் இரு நபர்கள் வந்து செல்வது பதிவாகியிருந்தது இதையடுத்து அந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கிய காவல்துறையின் அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த சாயீப் மற்றும் குலாம் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது அதில் சாயீப் மற்றும் பஞ்சு ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு தனிமையில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது தங்கை மனிஷா நர்சிங் படிப்பை தொடர தனிமையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். அவருக்கு உதவியாக அவரது தங்கை மஞ்சுவும் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் மஞ்சு டிக் டாக் செயலி மூலம் வேறு ஒரு நபருடன் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதையடுத்து அதை பார்த்த அவரது கணவர் சாயீப் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு இந்த மாதிரியாக வீடியோ பதிவுகளை ஏன் பதிவிட்டுள்ளாய் என திட்டியுள்ளார். இதையடுத்து அதற்கு மஞ்சு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காத நிலையில் ஆத்திரமடைந்த அவரது கணவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு உடந்தையாக தனது நண்பரான குலாம் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் மஞ்சுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விடுதி அறைக்கு சென்ற இருவர் மஞ்சுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சாயீப் அங்கிருந்த தோசை கல்லை எடுத்து மஞ்சுவை தாக்கியுள்ளார். அப்போது அவரது தங்கை மணிஷா வீட்டிற்கு வெளியே அமர்ந்துள்ளார். சத்தம் கேட்டு உடனே உள்ளே ஓடி வந்து பார்த்தபோது மஞ்சு தலையில் பலத்த அடி உடன் கீழே கிடந்துள்ளார்.

இதையடுத்து மனிஷா கூச்சலிட்ட போது அவரது தலையிலும் பலமாக அடித்துள்ளார்.பின்னர் அருகில் இருந்தவர்கள் வருவதை அறிந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொலை குற்றவாளிகள் காவல்துறையினரின் களவுமாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.