ஆபாச படத்தை வெளியிடுவோம்! மிரட்டிய மாணவர்கள்! கதறிய மாணவி! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

புகைப்படத்தை மார்பிங் செய்துவிடுவதாக மிரட்டிய மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே டிப்ளமோ படிக்கும் மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சஜின் மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் அவனது நண்பன் ஒருவனும் செல்போனில் தொடர்புகொண்டனர். மாணவியின் புகைப்படம் தங்கள் வசம் உள்ளதாகவும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் தராவிட்டால் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். பதறிய தந்தை அளித்த புகாரின் பேரில் முதலில் பத்தாம் வகுப்பு மாணவனை கைது செய்த போலீசார், கோவை அருகே பதுங்கியிருந்த சஜினை இன்று கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.