பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த டியூசன் மாஸ்டர் பார்த்திபன் அப்பகுதியில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்று வந்துள்ளார். இதுதொடர்பாக பார்த்திபன் மற்றும் அவரது இரு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படிக்க வந்த பசங்களுக்கு சைக்கிள் திருட கத்துக் கொடுத்த ட்யூசன் வாத்தியார்! பொறி வைத்து பிடித்த போலீஸ்!
தன்னிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களை வைத்து அருகிலுள்ள பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி அதை விற்பனை செய்து கொண்டிருந்ததாக டியூஷன் மாஸ்டர் பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த சில தினங்களாகவே அப்பகுதிகளில் விலை உயர்ந்த செல்லில் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளதை தொடர்ந்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அபார்ட்மென்ட்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த சைக்கிள்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது இதைதொடர்ந்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஏற்கனவே தகவல் கொடுத்துள்ளனர் . விலை வந்து சைக்கிளை மட்டுமே காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமரா மூலம் அப்பகுதியில் சோதனை செய்தபோது அங்கு மாணவர்கள் சிலர் சைக்கிள்களை திருடி சென்றது பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் யாரென தேடிவந்த போலீசார் மாணவர்களையும் டியூசன் மாஸ்டர் பார்த்திபனையும் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் டியூசன் மாஸ்டர் பார்த்திபன் தன் டியூஷனில் பயிலும் மாணவர்களை வைத்து சைக்கிளை திருடி வரச் சொல்வதும் அவர்களுக்கு சைக்கிளை விற்ற பணத்தில் பங்கு கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் பணத்தின் மீது ஆசை கொண்ட சிறுவர்கள் பார்த்திபன் சொல்வதுபோல் அப்பகுதிகளில் உள்ள விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டுமே திருடி பார்த்திபனிடம் கொடுத்து வந்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் திருடி வரப்பட்ட அனைத்து சைக்கிள்களையும் பார்த்திபன் தனது நண்பர் கோகுல் ராஜ் உதவியுடன் விற்பனை செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 விலையுயர்ந்த சைக்கிளை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.