தலைவர்களே இல்லாமல் நடைபெற்ற தினகரன் கட்சியின் கூட்டம்..! யாருமே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க..?

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது என்பார்கள். அப்படியொரு நிகழ்வுதான் இன்று தினகரன் கட்சியில் நடந்தது. ஆம், அ.தி.மு.க.வினர் நடத்திய செயற்குழுக் கூட்டத்தைப் போலவே, தினகரனின் அ.ம.மு.க. கட்சியினரும் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள்.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தினகரன் வருவார் என்ற எண்ணத்தில் ஒருசிலர் மட்டும் வந்து சேர்ந்தனர். ஆனால், இந்த கூட்டத்துக்கு தினகரனோ, துணைத் தலைவரான அன்பழகனோ, துணைப் பொதுச் செயலாளரான பழனியப்பனோ கலந்துகொள்ளவில்லை. 

கட்சியின் பொருளாளர் வெற்றிவேல், கொள்கை பரப்புச் செயலாளர் சி. ஆர். சரஸ்வதி, தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன்ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். தினகரன் வரவில்லை என்றதுமே ஒருசிலர் கிளம்பிவிட்டனர்.

வந்திருந்த நிர்வாகிகளிடம் பேசிய வெற்றிவேல், ‘’நாமதான் வரப்போற தேர்தலில் முக்கிய சக்தியா இருப்போம். எல்லோரும் இங்கே உறுப்பினர் பாரம் வாங்கிட்டுப் போங்க. எல்லோரும் நிறைய உறுப்பினர்களை சேர்த்துட்டு வாங்க’’ என்று அனுப்பிவைத்தார். கலந்துகொண்ட அத்தனை பேரும் முகத்தில் சுரத்தே இல்லாமல் கலைந்து சென்றனர்.